'துப்பாக்கிய பிடிங்க பாண்டி'... வெளியானது 'கொம்புசீவி' படத்தின் டிரெய்லர்
- இப்படத்தை பால சுப்ரமணியன் ஒளிப்பதிவு மேற்கொண்டுள்ளார்.
- ‘கொம்புசீவி’ கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்தது.
இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் மறைந்த விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியாக உள்ள படம் 'கொம்புசீவி'. இப்படத்தில் சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
யுகபாரதி, பா. விஜய், சினேகன் மற்றும் சூப்பர் சுப்பு ஆகியோரின் பாடல் வரிகளுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை பால சுப்ரமணியன் ஒளிப்பதிவு மேற்கொண்டுள்ளார்.
இப்படம் 1996 வாக்கில் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வைகை அணை பகுதியில் நடந்த கதைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ, முதல் பாடல் என வெளியானது. அதனை தொடர்ந்து 'கொம்புசீவி' கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்தது.
இந்த நிலையில், 'கொம்புசீவி' படம் கிறிஸ்துமஸுக்கு முன்னதாக வருகிற 19-ந்தேதி வெளியாகும் என டிரெய்லரை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. டிரெய்லரில் கிராமத்திற்காக போராடும் சரத்குமார், சண்முக பாண்டியனை சுற்றி வரும் கதையில் ஆக்ஷன், காதல், நகைச்சுவை கலந்து உருவாகி உள்ளது.