சினிமா செய்திகள்
null
துடரும் இயக்குனருடன் பேச்சுவார்த்தை நடத்திய கார்த்தி..!
- மோகன்லால் நடிப்பில் வெளியான துடரும் படம் வசூலை வாரிக் குவித்தது.
- அப்படத்தை இயக்கிய தருண் மூர்த்தியை அழைத்து பாராட்டு தெரிவித்திருந்தார் கார்த்தி.
மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான சஸ்பென்ஸ் திரில் படமான துடரும் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. அதோடு மட்டுமல்லாமல் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை வாரிக் குவித்தது. இப்படத்தை தருண் மூரத்தி இயக்கியிருந்தார்.
இந்த நிலையில் அடுத்த படத்தில் இணைவது தொடர்பாக தருண்மூர்த்தியுடன் கார்த்தி பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு பேரம் இணைந்து பணியாற்ற முடிவு செய்தால், மாமன், கருடன் படத்தை தயாரித்த ஸ்ரீ குமரன் பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கும் எனவும் தெரிகிறது.
துடரும் படம் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடியபோது கார்த்தி, தருண் மூர்த்தியை அழைத்து பாராட்டு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.