நான் chief minister ஆகுறதுக்காக அரசியலுக்கு வரவில்லை: கமல்ஹாசன்
- தம்பி STR போகப் போகும் தூரம் எனக்குத் தெரிகிறது.
- நான் chief minister ஆகுறதுக்கு ஒண்ணும் வரல என்றார்.
சென்னை:
சென்னையில் நடைபெற்று வரும் தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது:
தம்பி STR போகப் போகும் தூரம் எனக்குத் தெரிகிறது. உங்களுக்குப் புரிகிறது. உங்களுக்கு கடமை இருக்கிறது. இந்தக் கூட்டத்தை வழிநடத்தும் தலைவன் நீங்கள். அந்த ரெஸ்பான்சிபிளிடி உடன் நீங்கள் நடந்து கொள்வீர்கள். இது சுமை அல்ல, சுகம்.
நான் chief minister ஆகுறதுக்கு ஒண்ணும் வரல. எம்.எல்.ஏ, எம்.பி எல்லாம் எனக்கு புரியாது.
ஆனா 40 வருஷமா ஒரு எம்.எல்.ஏ. ஒரு தொகுதிக்கு என்ன பண்ணுவாரோ, அதை நாங்கள் சமயத்துக்கு மெதுவாக பண்ணிக்கிட்டே இருக்கோம். ஏனென்றால் நாங்கள் தனி மனிதர்கள்.
இங்கிருந்து என் கூட உழைத்த தம்பிகள் எல்லாம் பெரிய மனிதர்களாக சமுதாயத்தில் நடந்து கொண்டிருப்பது எனக்குப் பெருமை.
கலைஞர் டயலாக் சொன்னதுபோல், பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை என் பாதையில், படமெடுத்தாடும் பாம்புகள் நெளிந்திருக்கின்றன. ஆகாரத்திற்காக அழுக்கை சாப்பிட்டு தடாகத்தை சுத்தும் செய்யும் மீன், அதை போல நானும் என தெரிவித்தார்.