சினிமா செய்திகள்

அடுத்தடுத்து வெளியாகும் 'ஜன நாயகன்' Updates... Audio Launch எப்போது தெரியுமா?

Published On 2025-11-08 11:29 IST   |   Update On 2025-11-08 11:29:00 IST
  • இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் 9-ந்தேதி வெளியாகிறது.
  • இன்று மாலை வெளியாகும் பாடலை எதிர்நோக்கி காத்திருக்கும் ரசிகர்களுக்கு மற்றொரு தகவலும் வெளியாகி உள்ளது.

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் 'ஜன நாயகன்'. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. ஏனென்றால் இப்படமே நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும் எனவும் அதற்கு பின் முழுநேர அரசியலில் விஜய் ஈடுபடபோவதாக கூறப்படுகிறது.

மேலும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் 9-ந்தேதி வெளியாகிறது. இதற்கிடையே, இப்படத்திற்கான ப்ரேமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனிடையே, 'ஜன நாயகன்' படத்தின் 'தளபதி கச்சேரி' எனத் தொடங்கும் பாடல் இன்று மாலை 6.03-க்கு வெளியாகும் என்றும் இப்பாடலை விஜய் பாடியிருப்பதாக கூறப்படுகிறது.

இன்று மாலை வெளியாகும் பாடலை எதிர்நோக்கி காத்திருக்கும் ரசிகர்களுக்கு மற்றொரு தகவலும் வெளியாகி உள்ளது.

அதாவது, 'ஜன நாயகன்' படத்தின் ஆடியோ வெளியீடு குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி டிசம்பர் மாதம் 27-ந்தேதி மலேசியாவில் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

அடுத்தடுத்து 'ஜன நாயகன்' படம் குறித்த அப்டேட்கள் வெளியாகி வருவதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். 

Tags:    

Similar News