சினிமா செய்திகள்
null

இதுக்கு கூட ஹாஷ்டேகா? ஏ.ஆர். ரஹ்மான் பதிவுக்கு கொந்தளித்த நெட்டிசன்கள்

Published On 2024-11-21 10:44 IST   |   Update On 2024-11-21 12:14:00 IST
  • விவாகரத்து முடிவில் இருக்கும் சமயம் சண்டை, சச்சரவு, தகராறு, மோதல் என அரசல் புரசலாக ஏதாவது ஒரு தகவல் வெளியாகும்.
  • ஏ.ஆர் ரகுமான் நேற்று பதிவிட்ட எக்ஸ் பதிவில் #arrsairabreakup என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி இருந்தார்.

தமிழ் சினிமாவில் தனுஷ், ஜெயம் ரவி, ஜி.வி.பிரகாஷ் என நட்சத்திரங்களின் விவாகரத்து வரிசையில் தற்போது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் இணைந்திருப்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

எப்போதுமே சினிமா பிரபலங்கள் விவாகரத்து முடிவில் இருக்கும் சமயம் சண்டை, சச்சரவு, தகராறு, மோதல் என அரசல் புரசலாக ஏதாவது ஒரு தகவல் வெளியாகும். ஆனால் ஏ.ஆர்.ரகுமான் - சாய்ரா பானு இடையே இதுவரை எந்த சண்டையும், வாக்குவாதமும் ஏற்பட்டதாக யாருமே அறியாத நிலையில், திடீரென சாய்ரா பானுவின் இந்த பிரிவு அறிவிப்பு நேற்று இந்திய சினிமாவிலேயே பரபரப்பை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட 29 ஆண்டு கால திருமண வாழ்க்கை முறிந்துள்ளது.

ஏ.ஆர் ரகுமான் நேற்று பதிவிட்ட எக்ஸ் பதிவில் #arrsairabreakup என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி இருந்தார். இதற்கு நெட்டிசன்கள் அனைவரும் கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர். இந்த மாதிரி ஒரு சூழ்நிலைக்கு யார் ஹேஷ்டேகுகளை உருவாக்குவார்கள். எக்ஸ் பக்கத்தை பார்க்கும் அட்மினை வேலையை விட்டு நீக்குங்கள், விவாகரத்துக்கு ஹேஷ்டாக்கா என அவர்களது கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News