சினிமா செய்திகள்
null

"ஜனநாயகன்" இசை வெளியீட்டு விழா- எங்கு..? எப்போது..? வெளியானது முக்கிய அப்டேட்

Published On 2025-11-21 17:58 IST   |   Update On 2025-11-21 17:59:00 IST
ஜனநாயகன் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.

விஜய் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஜன நாயகன். இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இதில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் வாசுதேவ் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் படத்திற்கு இசையமைக்கிறார்.

அரசியலால் விஜய் நடிக்கும் கடைசிப் படம் இது என்பதால், ரசிகர்கள் மத்தியில் இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான "தளபதி கச்சேரி" வெளியாகி அவரது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாக புது அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது படக்குழு.

படத்தயாரிப்பு நிறுவனமான KVN புரொடக்ஷன்ஸ் இது சார்ந்த ஒரு வீடியோ பதிவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.

அதில் மலேசியாவின் ட்வின் டவர்ஸ் இடம்பெற்றுள்ளது. இதனால் படத்தின் இசை வெளியீட்டு விழா அங்கு நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், ஜனநாயகனின் இசை வெளியீட்டு விழா குறித்து முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி, விஜயின் ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 27ம் தேதி மலேசியாவில் நடைபெறவுள்ள அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News