சினிமா செய்திகள்
அனுமதியின்றி பாடல் பயன்படுத்துவதை தடுக்க இளையராஜாவுக்கு உரிமை உண்டு..!- நீதிமன்றம் அதிரடி உத்தரவு
குட் பேட் அக்லி படத்தில் இடம்பெற்ற பாடல்களை நீக்க நீதிமன்றம் உத்தரவு.
குட் பேட் அக்லி படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
மேலும், குட் பேட் அக்லி படத்தில் இடம்பெற்ற இளமை இதோ, இதோ, ஒத்த ரூபா தாரேன், என் ஜோடி மஞ்சக்குருவி பாடல்களை நீக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்," அனுமதியின்றி பாடல் பயன்படுத்துவதை தடுக்க, பாடலை உருமாற்றம் செய்வதை தடுக்க இளையராஜாவுக்கு உரிமை உண்டு.
இளையராஜா பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவில் தலையிட எந்த காரணமும் இல்லை" என்று நீதிபதி தெரிவித்தார்.
இடைக்கால தடையை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி செய்த நீதிமன்றம் பிரதான வழக்கின் விசாரணையை ஜனவரி 6ம் தேதிக்கு ஒத்திவைத்தது.