சினிமா செய்திகள்

நான் இதுவரை அந்த மாதிரி படங்களை பார்த்ததே இல்லை - சர்வதேச திரைப்பட விழாவில் சிவகார்த்திகேயன்

Published On 2024-11-24 16:16 IST   |   Update On 2024-11-24 16:16:00 IST
  • சிவகார்த்திகேயன் சமீபத்தில் நடித்த அமரன் திரைப்படம் மாபெரும் வெற்றிப் பெற்றது.
  • கோவாவில் நடக்கும் 55-வது சர்வதேச திரைப்பட விழாவில் சிவகார்த்திகேயன் கலந்துக் கொண்டார்.

சிவகார்த்திகேயன் சமீபத்தில் நடித்த அமரன் திரைப்படம் மாபெரும் வெற்றிப் பெற்றது. இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்து இருந்தார். உலகம்முழுவதும் இதுவரை 300 கோடி ரூபாய் வசூலில் கடந்துள்ளது. திரைப்படம் வெளியாகி 25 நாள் கடந்தும் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் கோவாவில் நடக்கும் 55-வது சர்வதேச திரைப்பட விழாவில் சிவகார்த்திகேயன் கலந்துக் கொண்டார். குஷ்பு இவரை நேர்காணல் நடத்தினார். அதில் சிவகார்த்திகேயன் அவரது தொழில் வளர்ச்சி மற்றும் சினிமா மீது உள்ள காதலை பற்றி உரையாடினர். அப்பொழுது சிவகார்த்திகேயன் கூறியதாவது " திரைப்பட விழாவில் பங்கேற்ற மக்களைப் பார்த்து இவர்களுக்குள் இருக்கும் நல்ல சினிமாவை பார்த்து விட வேண்டும் இருக்கிற தேடம் என்னிடம் இல்லை. ஆனால் நான் ஒரு சிறந்த சினிமா காதலன் மற்றும் நல்ல ரசிகன். நான் ரஜினி சாருடைய மிகப்பெரிய ரசிகன். அனைத்து ஸ்டார்களின் திரைப்படங்களும் நான் முதல் அல்லது இரண்டாம் நாளில் திரையரங்கில் பார்த்து விடுவேன். 2005 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை நான் திரைப்படங்களை திருட்டுதனமாகவோ, பைரேடட் படங்களை டவுன்லோட் செய்தோ பார்த்ததில்லை. இது தான் நான் சினிமாவின் மீது வைத்துள்ள காதல்.

நான் திரைபடங்களில் நடிக்க ஆரம்பித்த முதல் 5 முதல் 6 வருடங்கள் வரை எனக்கு என்ன தெரியுமோ, என்னால் எது நடிக்க முடியுமோ அம்மாதிரி திரைப்படங்களில் மட்டுமே நடித்தேன்.

இப்பொழுது நடிக்கும் கதைகள் என்னை தேர்ந்தெடுக்கிறது. அப்படி தான் எனக்கு மாவீரன், டாக்டர், அமரன் போன்ற திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது." என்றார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News