சினிமா செய்திகள்

"பரியேறும் பெருமாள்" படத்தில் நடிக்க அதர்வா ஒப்புக்கொள்ளாததற்கு ரொம்ப ஃபீல் பண்ணேன்- மாரி செல்வராஜ்

Published On 2025-06-11 19:30 IST   |   Update On 2025-06-11 19:30:00 IST
  • நாள் கூத்து, மான்ஸ்டர், ஃபர்ஹானா போன்ற திரைப்படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார்.
  • நான் முரளி சாருடைய மிகப் பெரிய ரசிகன்.

அதர்வா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் டிஎன்ஏ. இப்படத்தில் நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்தை ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர், ஃபர்ஹானா போன்ற திரைப்படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். டிஎன்ஏ திரைப்படம் வரும் ஜூன் 20ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், டிஎன்ஏ படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா நடைபெற்றது.

இதில், பங்கேற்ற இயக்குனர் செல்வராஜ் சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில்," அதர்வாவிடம் இதை சொல்லியே ஆகணும். அவருக்கு நியாபகம் இருக்கா என்று தெரியவில்லை. பரியேறும் பெருமாள் படத்தின் கதை சொன்ன முதல் ஹீரோ அவர் தான்.

பரதேசி படம் பார்த்து முடித்துவிட்டு பரியேறும் பெருமாள் கதை எழுதிய உடனே யார் கிட்ட போகலாம் என்று யோசித்திருந்தேன். நான் முரளி சாருடைய மிகப் பெரிய ரசிகன்.

முரளி சாருடைய பையன் ஹீரோ ஆகிட்டார் என்றதுடன், பாணா காத்தாடி வந்த உடனே, பரியேறும் பொருமாள் கதையுடன் வெச்சு யோசித்த ஹீரோ அதர்வா தான்.

ஆனால், அப்போது சில காரணங்களால பரியேறும் பெருமாள் படத்தை அவரால பண்ண முடியவில்லை. அத நினச்சு நான் ரொம்ப பீல் பண்ணேன். என் மனைவியிடம் கூட கூறியிருக்கேன்" என்றார்.

Tags:    

Similar News