சினிமா செய்திகள்

ஹாரர் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள 'நெவர் எஸ்கேப்' படத்தின் ட்ரைலர் வெளியீடு

Published On 2024-04-13 16:29 IST   |   Update On 2024-04-13 16:29:00 IST
  • இப்படத்தில் நடன இயக்குநர் ராபர்ட் மாஸ்டர் முதன்முறையாக எதிர்மறை பாத்திரத்தில் மிரட்டியுள்ளார்
  • இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது

ராயல் பி புரொடக்ஷன்ஸ் சார்பில் நான்சி ஃப்ளோரா தயாரிப்பில், இயக்குநர் டிஶ்ரீ அரவிந்த் தேவ் ராஜ் இயக்கும் புதிய படம் "நெவர் எஸ்கேப்." புதுமுக நட்சத்திரங்கள் நடிப்பில், அதிரவைக்கும் ஹாரர் திரில்லராக இப்படம் உருவாகி இருக்கிறது.

பல ஹாலிவுட் படங்கள் தரும், இதயம் அதிர வைக்கும் அதிரடியான ஹாரர் கலந்த திரில்லர் அனுபவத்தைத் தரும் வகையில் நெவர் எஸ்கேப் படம் உருவாகியுள்ளது.

இப்படத்தில் ஆதி பிருத்வி, ஹர்ஷினி முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, நடன இயக்குநர் ராபர்ட் மாஸ்டர் முதன்முறையாக எதிர்மறை பாத்திரத்தில் மிரட்டியுள்ளார். இவர்களுடன் கவி ஜெ சுந்தரம், உவைஸ் கான், ராஜி, அகிலா சுந்தர், ஜெபின் ஜான், பிரணேஷ்வர், சஷ்டி பிரணேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு சந்தோஷ் குமார் எஸ்.ஜே. ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய நடிகரும், நடன இயக்குநருமான ராபர்ட், "இப்படத்தின் கதை சொன்ன போது, யார் சார் டைரக்டர் என்று கேட்டேன், அரவிந்தைப் பார்த்தால் இயக்குநர் என்றே நம்பமுடியவில்லை. மூச்சு விடாமல் கதை சொன்னார். கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது."

"மொட்டை அடிக்க வேண்டும் என்றார்கள் தாடி எடுக்க வேண்டும் என்றார்கள். நான் வேறு ஒரு படத்தில் நடித்து கொண்டிருந்தேன், அவர்களிடம் அனுமதி வாங்கி இப்படத்தில் நடித்தேன். அதற்குக் காரணம் இவர்கள் மீதுள்ள அன்பு தான். நல்ல டீம் கடுமையாக உழைத்துள்ளனர். இப்படத்தில் என்னை வித்தியாசமாக பார்ப்பீர்கள், படம் நன்றாக வந்துள்ளது, படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்," என்று தெரிவித்தார்.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு தியேட்டருக்குள் மாட்டி கொண்ட நண்பர்களை ஒரு சைக்கோ கொலைகாரன் கொலை செய்ய திட்டமிடுகிறான். அந்த கொலைகாரனிடம் இருந்து அவர்கள் தப்பித்தார்களா? இல்லையா? என்பதே இப்படத்தின் கதை என்பது இப்படத்தின் ட்ரைலரை பார்க்கையில் யூகிக்கமுடிகிறது.

வரும் ஏப்ரல் 19-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News