சினிமா செய்திகள்
null

படத்தோட ஆடியோ ரைட்ஸ் மட்டும் இத்தனை கோடிகளா? அப்படி என்ன படம் இது?

Published On 2024-05-27 08:37 GMT   |   Update On 2024-05-27 09:22 GMT
  • KVN Production நிறுவனத்தின் தயாரிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான, "கேடி: தி டெவில்ஸ் வார்ஃபீல்ட்" திரைப்படம், டிசம்பர் 2024 இல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
  • 1970களில் நடந்த பெங்களூரில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது.

KVN Production நிறுவனத்தின் தயாரிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான, "கேடி: தி டெவில்ஸ் வார்ஃபீல்ட்" திரைப்படம், டிசம்பர் 2024 இல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த ஆக்சன் திரைப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

1970களில் நடந்த பெங்களூரில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் ஆடியோ ரைட்ஸ் மட்டுமே, ₹17.70 கோடிக்கு விற்கப்பட்டிருப்பது பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. இதன் ஆடியோ உரிமையை பிரபல ஆடியோ நிறுவனமான ஆனந்த் ஆடியோ வாங்கியுள்ளனர்.

இப்படத்தின் ரிலீஸுக்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், படத்தின் முதல் பாடல் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்ற அறிவிப்பு, ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல கன்னட நடிகரான துருவா சர்ஜா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

 ஷில்பா ஷெட்டி குந்த்ரா, ரமேஷ் அரவிந்த், சஞ்சய் தத், நோரா ஃபதேஹி மற்றும் V ரவிச்சந்திரன் ஆகிய முன்னணி நட்சத்திரங்களின் பங்கேற்பில் இப்படம் பான்-இந்தியா பிரம்மாண்டமாக, ஒரு புதுமையான திரை அனுபவமாக இருக்கும்.

 

"கேடி - தி டெவில்" 1970களில் இருந்த பெங்களூர் நகரின் தெருக்களுக்குப் பார்வையாளர்களை மீண்டும் கூட்டிச் செல்லும், இப்படம் வரலாற்று நிகழ்வுகளில் வேரூன்றிய ஒரு பரபரப்பான சம்பவத்தை மீண்டும் கண்முன் கொண்டுவரவுள்ளது.

KVN Productions வழங்கும் "கேடி - தி டெவில்" படத்தை பிரேம் இயக்கியுள்ளார். பான்-இந்தியா பன்மொழி திரைப்படமாக உருவாகும் இப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News