சினிமா செய்திகள்
null

'மங்காத்தா 2' - வெங்கட் பிரபு கொடுத்த அப்டேட்

Published On 2024-08-26 20:10 IST   |   Update On 2024-08-26 20:14:00 IST
  • நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்). திரைப்படம்
  • படத்தின் ஸ்பெஷல் சாங் இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ளதாக வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்). திரைப்படம் வரும் செப் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.படக்குழு முடிந்த அளவுக்கு தொடர்ந்து அப்டேட்டுகளை வெளியிட்டு வருகின்றனர். படத்தின் ஸ்பெஷல் சாங் இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ளதாக வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

படக்குழு மலேசியாவில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டனர். அதில் வெங்கட் பிரபு நடிகர் அஜித்தை சமீபத்தில் பார்த்த அனுபவத்தை பகிர்ந்துக் கொண்டார். அண்மையில் விடா முயற்சி படப்பிடிப்பு பணிகள் அஜர்பைஜானில் நடந்து முடிந்தது. அப்பொழுது வெங்கட் பிரபு , நடிகர் அஜித் குமாரை சந்தித்தார். "அங்கு நாங்கள் நிறைய விஷயத்தைப் பற்று பேசினோம். பல ப்ராஜக்டுகளை பற்றி கலந்துரையாடினோம். விஜய் மற்றும் அஜித்தை ஒரே படத்தில் நடிக்க வைக்க வேண்டிய ஆசை எனக்கு இருக்கிறது என அவர்கள் இருவருக்கும் தெரியும். மங்காத்தா 2 திரைப்படத்தை நடிகர் அஜித்தை வைத்து தான் எடுக்க வேண்டும், இல்லையென்றான் அவரது ரசிகர்கள் என்னை அடித்து விடுவார்கள். பல விஷயங்களை பற்றி பேசினோம். அது எப்படி நடக்கும், எப்போ நடக்கும் என தெரியாது " என நகைச்சுவையாக பேசினார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News