சினிமா செய்திகள்
null

Ajith Kumar Racing..! புதிதாக யூ டியூப் சேனலை தொடங்கிய அஜித்

Published On 2025-05-25 08:33 IST   |   Update On 2025-05-25 08:35:00 IST
  • அஜித் தனது சொந்த பந்தய அணியான Ajith Kumar Racing ஐ உருவாக்கினார்.
  • அஜித், பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வெற்றி வாகையை சூடி வருகிறார்.

நடிகர் அஜித் குமார், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மட்டுமல்லாமல், ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்கிறார்.

கடந்த 2004ஆம் ஆண்டு முதல் கார் ரேஸில் ஆர்வம் காட்டத் தொடங்கிய அஜித், Formula Maruti Indian Championships மற்றும் Formula BMW Asia Championship போன்ற பந்தயங்களில் பங்கேற்றார்.

2003-ல், அவர் MRF Racing Series-ல் பங்கேற்று, தனது முதல் பந்தய அனுபவத்தைப் பெற்றார்.

2010-ல், அஜித் குமார் FIA Formula Two Championship பந்தயத்தில் பங்கேற்றார். சர்வதேச அளவிலான கார் பந்தயத் தொடரான இதில், அவர் பல ஐரோப்பிய பந்தயங்களில் போட்டியிட்டார்.

கடந்த ஆண்டு முதல் கார் ரேசிங்கிள் தீவிரம் காட்டி வரும் அஜித், பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வெற்றி வாகையை சூடி வருகிறார்.

இதற்கிடைய, அஜித் தனது சொந்த பந்தய அணியான Ajith Kumar Racing ஐ உருவாக்கினார். இந்த அணி மூலம் அவர் பந்தயங்களில் பங்கேற்றதோடு, இளம் பந்தய வீரர்களை ஊக்குவித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் அஜித் குமாரின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் AjithKumarRacing என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த சேனல் அவரது கார் ரேசிங் தொடர்பான செயல்பாடுகளை மையமாகக் கொண்டு இயங்குகிறது. இதில் அஜித் குமார் பங்கேற்கும் கார் பந்தயங்கள், பயிற்சி வீடியோக்கள் மற்றும் தொடர்புடைய பிற உள்ளடக்கங்கள் பகிரப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த சேனல் மூலம் அஜித் குமார் தனது ரேசிங் ஆர்வத்தை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். அஜித் குமாரின் யூடியூப் சேனல் தொடங்கிய சில மணி நேரங்களில் 17 ஆயிரம் பேருக்கும் மேற்பட்டோர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர்.

அஜித் குமாரின்  அதிகாரப்பூர்வ யூடியூட் சேனலுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News