சினிமா செய்திகள்

திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் ஸ்ரீகாந்த்

Published On 2025-09-11 09:44 IST   |   Update On 2025-09-11 09:44:00 IST
  • நடிகர் ஸ்ரீகாந்த் கடந்த 2 மாதங்களாக சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வந்தார்.
  • ரசிகர்கள் அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட சம்பவம் திரைத்துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும் இவ்வழக்கு தொடர்பாக நடிகர் கிருஷ்ணாவும் கைதானார்.

இவ்வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. ஜாமினில் வெளியே வந்த நடிகர் ஸ்ரீகாந்த் கடந்த 2 மாதங்களாக சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வந்தார்.

இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று நடிகர் ஸ்ரீகாந்த் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். நடிகர் ஸ்ரீகாந்தை பார்த்தவுடன் ரசிகர்கள் அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். 

Tags:    

Similar News