சினிமா செய்திகள்

தந்தைக்கு கௌரவ டாக்டர் பட்டம் - நடிகர் கார்த்தி நெகிழ்ச்சி கடிதம்

Published On 2025-11-29 12:21 IST   |   Update On 2025-11-29 12:21:00 IST
  • ஒரு மகனாக நீங்கள் காட்டிய வழியில் நடப்பதை பெருமையாக உணர்கிறேன்.
  • இந்த தருணத்தில் கௌரவ முனைவர் பட்டம் பெற்ற திரு குருஸ்வாமி சந்திரசேகரன் அவர்களுக்கும் எங்களின் அன்பான வாழ்த்துகள்.

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நடிகர் சிவகுமார், ஓவியர் குருசாமி சந்திரசேகரன் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனைக்கான மதிப்புறு முனைவர் பட்டங்களை நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதுகுறித்து நடிகரும், சிவகுமாரின் மகனுமான கார்த்தி நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள கடிதத்தில்,

அன்புடையீர்,

ஒரு நடிகராக பல தலைமுறைகளைக் கவர்ந்ததோடு, ஓவியக் கலை மீது கொண்ட பேராதரவும் அப்பாவின் வாழ்க்கையை தனித்துவமாக்கியது.

கம்பன் என் காதலன். திருக்குறன் 100. மகாபாரத உரை போன்ற பெரும் இலக்கியங்களை மக்கள் மனங்களில் நவீனமாகப் பதிய வைத்த அவரின் பணி, தமிழ் மரபை பாதுகாக்கும் வாழ்நாள் அரப்பணிப்பு.

அப்பாவின் கலைச்சேவையை பெருமைப்படுத்தும் விதமாக தமிழக முதலமைச்சர் கைகளால் அப்பாவுக்கு வழங்கப்பட்ட கௌரவ முனைவர் பட்டம், எங்களுக்கும், கலை உலகிற்கும் மிகுந்த மகிழ்வை தருகிறது. தமிழக முதலமைச்சருக்கும் தமிழக அரசுக்கும் எங்கள் அன்பார்ந்த நன்றிகள்.

இந்த அங்கீகாரம், அவரது ஆழ்ந்த உழைப்புக்கும், கலை-இலக்கிய ஈடுபாடுக்கும் கிடைத்த உரிய மரியாதை.

ஒரு மகனாக நீங்கள் காட்டிய வழியில் நடப்பதை பெருமையாக உணர்கிறேன்.

இந்த தருணத்தில் கௌரவ முனைவர் பட்டம் பெற்ற திரு குருஸ்வாமி சந்திரசேகரன் அவர்களுக்கும் எங்களின் அன்பான வாழ்த்துகள் என்று கூறியுள்ளார். 



Tags:    

Similar News