சினிமா செய்திகள்
வெற்றிமாறன்

வெற்றிமாறன் கைக்காட்டும் நபருக்கு படம் இயக்க வாய்ப்பு - அதிரடியாக அறி்வித்த தயாரிப்பாளர்

Published On 2022-04-16 11:34 IST   |   Update On 2022-04-16 12:57:00 IST
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான வெற்றிமாறன் கைக்காட்டும் நபருக்கு படம் இயக்க வாய்ப்பு தருவேன் என்று பிரபல தயாரிப்பாளர் கூறியுள்ளார்.
இயக்குனர் வெற்றிமாறன் “ நாம்” அறக்கட்டளையின் சார்பாகத்திரை பண்பாடு ஆய்வகத்தைத் தொடங்கி உள்ளார். சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவிகளுக்கு நுழைவு தேர்வு வைத்து அவர்களின் வீடுகளுக்கு நேரடி யாகச் சென்று, உண்மையிலேயே சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் விளிம்பு நிலை மனிதர்களாக, முதல் தலைமுறை பட்டாதாரிகளாக இருக்கிறார்களா? தனது வலியை, தனது பண்பாட்டை ஊடகங்களில் பதிவு செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கிறார்களா? என்று ஆய்வு செய்து அவர்கள் குடும்பத்தின் ஒப்புதலோடு மாணவ, மாணவிகளுக்கு கல்வி, உணவு, தங்குமிடம் போன்ற வசதிகளைக் கட்டண மில்லாமல் ஏற்பாடு செய்து ஊடகத்துறையில் மிகச்சிறந்த ஆளுமைகளாக உருவாக்க இந்நிறுவனத்தை உருவாக்கி இருக்கிறார்.


கலைப்புலி எஸ்.தாணு

இந்நிறுவனத்தின் தொடக்க நிகழ்ச்சியின் போது கலைப்புலி எஸ்.தாணு முதல் நபராக ஒரு கோடி ரூபாயை வெற்றிமாறனின் தாயார் மேகலா சித்திரவேலிடம் கொடுத்தார். 


நாம் அறக்கட்டளை

அதோடு இந்த நிறுவனத்தில் படிக்கும் மாணவ-மாணவிகளில் வெற்றிமாறன் யாரை கை காட்டுகிறாரோ அவர்களுக்குத் தனது வி கிரியேசன்ஸ் நிறுவனத்தில் படத்தை இயக்கும் வாய்ப்பு தரப்படும் என்று அறிவித்தார்.

Similar News