சினிமா செய்திகள்
அமீர் - வெற்றிமாறன்

அமீர் - வெற்றிமாறன் கூட்டணியின் டைட்டில் போஸ்டர் வெளியானது

Published On 2022-02-14 12:27 IST   |   Update On 2022-02-14 13:35:00 IST
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களான வெற்றிமாறன் மற்றும் அமீர் இணைந்திருக்கும் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகியுள்ளது.
மௌனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் அமீர். அப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் ரசிகர்களை கவர்ந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதன்பின் ராம், பருத்திவீரன், ஆதிபகவன் போன்ற படங்களை இயக்கி முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் இணைந்தார். இவர் யோகி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். நீண்ட இடைவேளைக்கு பிறகு வெற்றிமாறன் இயக்கிய ’வடசென்னை’ படத்தில் நடித்து பலரின் பாராட்டுக்களையும் பெற்றார்.


இறைவன் மிக பெரியவன்

சமீபத்தில் அமீர் மீண்டும் இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்த படத்திற்கு இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் தங்கம் இருவரும் கதை எழுத அமீர் இயக்கவுள்ளார். இந்நிலையில் இப்படத்திற்கு 'இறைவன் மிக பெரியவன்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் டைட்டில் போஸ்டரை வெளியிட்ட படக்குழு இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இறைவன் மிக பெரியவன் தலைப்பில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் மூன்று மதத்தின் அடையாளங்களை இடம் பெறச்செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Similar News