தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்.
மனைவி ஐஸ்வர்யாவை பிரிந்தார் தனுஷ்
பதிவு: ஜனவரி 17, 2022 23:24 IST
ஐஸ்வர்யா - தனுஷ்
தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் கடந்த கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் 18ம் நாள் திருமணம் செய்துக் கொண்டனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷை விட ஒரு வயது மூத்தவர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர்.
தனுஷ் அறிக்கைஇந்நிலையில், மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக தனுஷ் அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 18 வருடங்களாக நண்பர், தம்பதி, பெற்றோர் மற்றும் நலம் விரும்பியாக நாங்க இருந்து இருக்கிறோம். எங்கள் வாழ்க்கை பயணம் பல புரிதல்களோடு நெடுந்தூர பயணமாக இருந்தது.
இன்று முதல் எங்களுடைய பயணம் வெவ்வேறாக இருக்க முடிவு செய்து இருக்கிறோம். நானும் ஐஸ்வர்யாவும் சேர்ந்து முடிவு எடுத்து இருக்கிறோம். எங்கள் முடிவுக்கு மரியாதை கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம் என்று பதிவு செய்துள்ளார்.
Related Tags :