சினிமா செய்திகள்
பாக்யராஜ்

இயக்குனர்கள் சங்க தேர்தல் ஒத்திவைப்பு

Published On 2022-01-17 22:58 IST   |   Update On 2022-01-17 22:58:00 IST
பாக்யராஜ் மற்றும் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் போட்டியிடும் இயக்குனர்கள் சங்க தேர்தல் திடீரென்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் சங்க தேர்தல் ஜனவரி 23ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜனவரி 25ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு இயக்குனர் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவித்திருப்பதால் ஜனவரி 23ஆம் தேதி ஞாயிறு அன்று நடைபெற இருந்த இயக்குனர் சங்க தேர்தல் 25ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாற்றப்பட்டுள்ளது

மேலும் வெளியூர் சென்றவர்கள் ஊரடங்கு காரணமாக மறுநாள் திங்கட்கிழமை சென்னை திரும்பும்போது சிரமம் என்பதால் செவ்வாய் கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் சங்க தேர்தலில் பாக்யராஜ் மற்றும் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் போட்டி போடுகின்றனர். 

Similar News