நடிகர் அருள்நிதியின் 15-வது படமான டி-பிளாக் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
அருள்நிதியின் டி-பிளாக் டிரைலர் வெளியானது
பதிவு: ஜனவரி 17, 2022 12:15 IST
அருள்நிதி
‘வம்சம்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் அருள்நிதி. இப்படத்தில் இவருடைய நடிப்பு அனைவராலும் வரவேற்கப்பட்டது. இதையடுத்து ‘மௌனகுரு’, ‘டிமாண்டி காலனி’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘பிருந்தாவனம்’, ‘கே 13’ என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களாக நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார்.
இந்நிலையில், நடிகர் அருள்நிதி அவருடைய 15-வது படத்தை யுடியூப்பில் பிரபலமான எருமசாணி தொடர் மூலம் புகழ்பெற்ற விஜய்குமார் ராஜேந்திரன் இயக்கினார். இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அந்த் படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளது அப்படக்குழு.
இப்படத்தை ஒளிப்பதிவாளர் அரவிந்த்சிங் தயாரித்துள்ளார். சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் படத்தை வாங்கி உள்ளது.
Related Tags :