சினிமா
அமீர்கான்

படக்குழுவினரிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான்

Published On 2021-11-25 11:41 IST   |   Update On 2021-11-25 11:41:00 IST
பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் அமீர்கான், யாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் கே.ஜி.எப்.2 படக்குழுவினரிடம் மன்னிப்பு கேட்டு இருக்கிறார்.
டாம் ஹாங்ஸ் நடிப்பில் 1994-ல் வெளியாகி உலக அளவில் வரவேற்பை பெற்ற ‘பாரஸ்ட் கம்ப்' ஹாலிவுட் படம் இந்தியில் அமீர்கான் நடிக்க லால் சிங் சட்டா என்ற பெயரில் ரீமேக் ஆகி உள்ளது. ஏற்கனவே யாஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் தயாராகி உள்ள கே.ஜி.எப்.-2 படம் வருகிற ஏப்ரல் மாதம் 14-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவித்துள்ள நிலையில் தற்போது அதே தேதியில் அமீர்கானின் லால் சிங் சட்டா படமும் வெளியாகும் என்று தெரிவித்து உள்ளனர்.

இதனால் கே.ஜி.எப். படக்குழுவினர் வட இந்தியாவில் தங்கள் படத்துக்கு குறைவான தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என்று அதிருப்தி அடைந்தனர். இதையடுத்து கே.ஜி.எப்.-2 படக்குழுவினரிடம் அமீர்கான் மன்னிப்பு கேட்டுள்ளார்.



இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘லால்சிங் சட்டா படத்தை கே.ஜி.எப்.-2 வெளியாகும் நாளில் ரிலீஸ் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் குறித்து கே.ஜி.எப்.-2 படத்தின் கதாநாயகன் யாஷ் உள்ளிட்ட படக்குழுவினருக்கு கடிதம் எழுதி மன்னிப்பு கேட்டேன். அவர்களும் எனது நிலையை புரிந்து கொண்டனர். கே.ஜி.எப். அதிரடி சண்டை படம், எனது படம் காதல் கதையிலான குடும்ப படம். எனவே இரண்டையும் மக்கள் பார்ப்பார்கள். வசூல் பாதிக்காது” என்றார்.
Tags:    

Similar News