சினிமா
அனுபமா பரமேஸ்வரன், அதர்வா

பண்டிகை தினத்தன்று ரிலீசாகும் அதர்வாவின் ‘தள்ளிப் போகாதே’

Published On 2021-09-20 15:27 IST   |   Update On 2021-09-20 15:27:00 IST
ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள ‘தள்ளிப் போகாதே’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஜெயம் கொண்டான் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஆர்.கண்ணன். இதையடுத்து சேட்டை, கண்டேன் காதலை, இவன் தந்திரன், பூமரேங் போன்ற படங்களை இயக்கிய அவர், அடுத்ததாக அதர்வாவின் ‘தள்ளிப் போகாதே’ படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.

கோபி சுந்தர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


தள்ளிப் போகாதே படத்தின் போஸ்டர்

இந்நிலையில், ‘தள்ளிப் போகாதே’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இப்படம் வருகிற அக்டோபர் 14-ந் தேதி ஆயுதபூஜை பண்டிகையன்று திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதே தினத்தில் விஷாலின் ‘எனிமி’, ஆர்யாவின் ‘அரண்மனை 3’ ஆகிய படங்களும் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News