சினிமா
அஜித்

இரண்டே நாட்களில் 1 கோடி... மாஸ் காட்டும் வலிமை மோஷன் போஸ்டர்

Published On 2021-07-14 08:30 IST   |   Update On 2021-07-14 16:45:00 IST
அஜித் - எச்.வினோத் கூட்டணியில் உருவாகி உள்ள படம் வலிமை, இப்படத்தின் மோஷன் போஸ்டர் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.
அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் வலிமை. எச்.வினோத் இயக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடிக்கின்றனர். 

வலிமை அப்டேட்டுக்காக ஓராண்டுக்கு மேலாக காத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, எந்தவித முன் அறிவிப்பும் இன்றி வலிமை படத்தின் மோஷன் போஸ்டரை இரு தினங்களுக்கு முன் வெளியிட்டனர். 

அஜித்தின் ஸ்டைலிஷ் லுக், யுவன் சங்கர் ராஜாவின் மாஸான பின்னணி இசை என ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் அமைந்திருந்த இந்த மோஷன் போஸ்டர், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


வலிமை படக்குழு வெளியிட்ட புதிய போஸ்டர்

இந்நிலையில், வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் வெளியான இரண்டே நாட்களில் யூடியூபில் 1 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது. இதையொட்டி அஜித்தின் தோற்றம் அடங்கிய புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Similar News