சினிமா
அண்ணாத்த படத்தின் புதிய அப்டேட்... மீண்டும் வெளியூர் செல்லும் ரஜினி
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள அண்ணாத்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘அண்ணாத்த’. கொரோனா அச்சத்திற்கு நடுவிலும் இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்தது.
இதையடுத்து நடிகர் ரஜினி சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். சிகிச்சைக்கு பிறகு சென்னை திரும்பி இருக்கும் ரஜினி, தற்போது அண்ணாத்த படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்புக்காக நாளை மறுநாள் (ஜூலை 14) மேற்கு வங்கம் செல்ல இருக்கிறார்.
அங்கு நான்கு நாட்கள் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. அதன்பின் அண்ணாத்த திரைப்படத்தின் டப்பிங் பணியை தொடங்க இருக்கிறார் ரஜினி. இப்படம் தீபாவளியை முன்னிட்டு 4.11.2021 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.