சினிமா
சிவகார்த்திகேயன்

18 வருடங்களுக்குப் பிறகு அப்பா என் விரல் பிடித்திருக்கிறார்... சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

Published On 2021-07-12 16:17 IST   |   Update On 2021-07-12 16:17:00 IST
முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன், தனது சமூக வலைத்தள பக்கத்தில் தனக்கு குழந்தை பிறந்து இருப்பதை மகிழ்ச்சியாக தெரிவித்து இருக்கிறார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவருடைய மனைவியின் பெயர் ஆர்த்தி. இவர்களுக்கு ஆராதனா என்ற மகள் இருக்கிறார்.

இந்நிலையில் இன்று (ஜூலை 12) சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதியினருக்கு மகன் பிறந்திருக்கிறார். இதனை முன்னிட்டு பலரும் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். டுவிட்டர் தளத்தில் #KuttySK என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது.

தனக்கு மகன் பிறந்திருப்பது தொடர்பாக சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தள பக்கத்தில், "18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக... என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த் துளிகளால் நன்றி. அம்மாவும் குழந்தையும் நலம்" என்று பதிவு செய்து இருக்கிறார்.

Similar News