சினிமா
சூர்யா

சூர்யா ரசிகர்களுக்காக சர்ப்ரைஸ் அப்டேட் வெளியிட்ட ‘நவரசா’ படக்குழு

Published On 2021-07-12 11:48 IST   |   Update On 2021-07-12 11:53:00 IST
நவரசா வெப் தொடரில் இடம்பெறும் 9 குறும்படங்களில், கவுதம் மேனன் - சூர்யா கூட்டணியில் உருவாகும் ‘கிட்டார் கம்பி மேலே நின்று’ குறும்படமும் ஒன்று.
கொரோனாவால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள திரையுலகிற்கு நிதி திரட்டும் நோக்கில் ‘நவரசா’ என்கிற ஆந்தாலஜி வெப் தொடர் உருவாகி இருக்கிறது. நவரசங்களை அடிப்படையாக கொண்டு உருவாகி உள்ள இந்த ஆந்தாலஜி தொடரை 9 இயக்குனர்கள் இயக்கி உள்ளனர். இதனை மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்த வெப் தொடரில் இடம்பெறும் 9 குறும்படங்களில், கவுதம் மேனன் - சூர்யா கூட்டணியில் உருவாகும் ‘கிட்டார் கம்பி மேலே நின்று’ குறும்படமும் ஒன்று. இந்நிலையில், இந்த குறும்படம் குறித்த சர்ப்ரைஸ் அப்டேட் வெளியாகி உள்ளது. 


சூர்யா, ப்ரயாகா

அதன்படி, ‘கிட்டார் கம்பி மேலே நின்று’ குறும்படத்தில் இடம்பெறும் ‘தூரிகா’ எனும் பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தப் பாடலை கார்த்திக் இசையமைத்து பாடியுள்ளார். மதன் கார்க்கி இப்பாடல் வரிகளை எழுதி உள்ளார். நவரசா வெப் தொடர் வருகிற ஆகஸ்ட் 6-ந் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Similar News