சினிமா
தனுஷ் - கார்த்திக் நரேன்

தனுஷ் படத்தில் இருந்து இயக்குனர் விலகல்?... படக்குழுவினர் விளக்கம்

Update: 2021-07-10 09:09 GMT
தனுஷ் தற்போது நடித்து வரும் D 43 படத்திலிருந்து இயக்குனர் விலகிவிட்டார் என்று வெளியான தகவலுக்கு படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர்.
'தி கிரே மேன்' ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, இந்தியா திரும்பிய தனுஷ், தற்போது ஹைதராபாத்தில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் 'டி 43' படத்தில் நடித்து வருகிறார். சத்யஜோதி நிறுவனம் தயாரித்துவரும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் இயக்குனர் பொறுப்பிலிருந்து கார்த்திக் நரேன் விலகிவிட்டார் என்று செய்திகள் வெளியானது. மேலும், தனுஷே தற்போது இயக்கி வருவதாகவும், அவருக்கு உறுதுணையாக சுப்பிரமணிய சிவா இருப்பதாகவும் கூறப்பட்டது.இது தொடர்பாக விசாரித்தபோது, "தனுஷ் - கார்த்திக் நரேன் இருவருக்குமே எந்தவொரு பிரச்சனையும் இல்லை. கார்த்திக் நரேன்தான் இயக்குனராகப் பணிபுரிந்து வருகிறார்" என்று தெரிவித்தார்கள்.
Tags:    

Similar News