சினிமா
சனம் ஷெட்டி

காவல்துறையினருக்கு நன்றி சொன்ன சனம் ஷெட்டி

Published On 2021-07-08 17:36 IST   |   Update On 2021-07-08 17:36:00 IST
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமான நடிகை சனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய மர்ம நபர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.
அம்புலி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சனம் ஷெட்டி. பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர். இவரது வாட்ஸ் ஆப் மற்றும் இன்ஸ்டாகிராமிற்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொடர்ந்து ஆபாச மெசேஜ்கள் மற்றும் போட்டோக்களை அனுப்பி வருவதாகவும், அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சில தினங்களுக்கு முன்பு அடையாறு சைபர் பிரிவில் புகார் அளித்தார்.

புகார் அளித்த 2 நாட்களில் ஆபாச மெசேஜ்கள் அனுப்பியதாக திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ராய் ஜான்பால் (21) என்பவரை சைபர் பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் தான் கொடுத்த புகாருக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்த காவல்துறைக்கு நன்றி தெரிவித்து நடிகை சனம் ஷெட்டி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.


Similar News