சினிமா
நாய்க்குட்டி பிறந்தநாள்

நாய்க்குட்டிக்கு பிறந்தநாள் கொண்டாடிய பிரபல இயக்குனர்

Update: 2021-07-07 14:50 GMT
இயக்குனர் அட்லீயும் அவரது மனைவி பிரியா அட்லீயும் தங்களது செல்ல நாய்க்குட்டிக்கு பிறந்தநாள் கொண்டாடி இருக்கிறார்கள்.
ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார் அட்லீ. தற்போது இவர் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


அட்லீ - பிரியா அட்லீ

இந்நிலையில் அட்லீ மற்றும் அவரது மனைவி பிரியா அட்லீ தங்கள் செல்ல நாய்க்குட்டியின் 5-வது பிறந்தநாளை கேக் வெட்டி மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளனர். மேலும் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பிரியா அட்லீ தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Tags:    

Similar News