சினிமா
ஐஸ்வர்யா ராஜேஷுக்கு கேக் வெட்டி நன்றி சொன்ன படக்குழுவினர்
தமிழ் சினிமாவில் சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு படக்குழுவினர் கேக் வெட்டி நன்றி சொல்லி இருக்கிறார்கள்.
தமிழில் வெண்ணிலா கபடி குழு, பலே பாண்டியா, குள்ள நரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் அடுத்ததாக மோகன்தாஸ் திரைப்படம் உருவாகி வருகிறது.
களவு படத்தை இயக்கிய முரளி கார்த்திக் இப்படத்தை இயக்குகிறார். இதில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். உண்மைக்கதையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தை விஷ்ணு விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.
படக்குழுவினருடன் ஐஸ்வர்யா ராஜேஷ்
இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் காட்சிகள் அனைத்தும் முடிந்து விட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் கேக் வெட்டி ஐஸ்வர்யா ராஜேஷுக்கு படக்குழுவினர் நன்றி தெரிவித்து இருக்கிறார்கள்.