சினிமா
சுவாதி

திருமணத்திற்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்பில் சுவாதி

Published On 2021-07-05 19:16 IST   |   Update On 2021-07-05 19:16:00 IST
தமிழில் சுப்ரமணியபுரம், கனிமொழி, போராளி, வடகறி படங்களில் நடித்து பிரபலமான நடிகை சுவாதி, திருமணத்திற்குப் பிறகு மீண்டும் படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்.
தமிழில் சசிகுமார் இயக்கத்தில் 2008-ல் வெளியான சுப்ரமணியபுரம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சுவாதி. அந்த படத்தில் இடம்பெற்ற ‘கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய்’ பாடலில் சுவாதியின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. தொடர்ந்து கனிமொழி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, போராளி, வடகறி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். 

2018-ல் கேரளாவைச் சேர்ந்த விமானி விகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார். கணவருடன் இந்தோனேசியாவில் குடியேறினார். சில மாதங்களுக்கு முன்பு ஐதராபாத் திரும்பிய சுவாதி மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்து இருப்பதாகவும், இதற்காக கதைகள் கேட்டு வருவதாகவும் தகவல் வெளியானது.


படப்பிடிப்பில் சுவாதி

இந்தநிலையில் புதிய தெலுங்கு படத்தில் நடிக்க சுவாதி ஒப்பந்தமாகி உள்ளார். இதன் படப்பிடிப்பு தற்போது தொடங்கி உள்ளது. படப்பிடிப்பில் சுவாதி பங்கேற்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகின்றன.

Similar News