சினிமா
கௌதம் கார்த்திக்

பெருமைப்படுகிறேன்... தாத்தா பிறந்தநாளுக்கு கௌதம் கார்த்திக்கின் நெகிழ்ச்சி பதிவு

Published On 2021-07-05 17:41 IST   |   Update On 2021-07-05 17:41:00 IST
பத்து தல, ஆனந்தம் விளையாடும் வீடு ஆகிய படங்களில் பிசியாக நடித்து வரும் கௌதம் கார்த்திக், தனது தாத்தா பிறந்தநாளுக்கு சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வருபவர் கௌதம் கார்த்திக். இவர் மணிரத்னம் இயக்கிய ’கடல்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் ’வை ராஜா வை’, ’இவன் தந்திரன்’, ’ஹர ஹர மகாதேவி’, ’இருட்டு அறையில் முரட்டு குத்து’, ’தேவராட்டம்’ உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். மேலும் பத்து தல, ஆனந்தம் விளையாடும் வீடு போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

கௌதம் கார்த்திக் பழம்பெரும் நடிகர் முத்து ராமனின் பேரன். எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் காலங்களில் ஹீரோவாக வலம் வந்தவர் முத்துராமன். இவரின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் கௌதம் கார்த்திக் தனது சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியுடன் ஒரு பதிவு செய்துள்ளார்.

அதில் ’நான் உங்களை நேரில் பார்க்கவில்லை என்றாலும் உங்களை பற்றி நான் நிறைய கேள்விப்பட்டிருக்கின்றேன். நான் கேள்விப்பட்ட அனைத்தும் என்னை மகிழ்ச்சி அடைய செய்ததோடு, அதன் மூலம் நான் நிறைய கற்றுக் கொண்டேன். உங்கள் பேரனாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன். உங்களைப் போலவே நானும் அன்பான, கடின உழைப்பாளியாக, திறமையான அர்ப்பணிப்பு உணர்வுடன் பணி செய்வேன் என்று நம்புகிறேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள் தாத்தா’ என்று கூறியுள்ளார். 


Similar News