சினிமா
ஷங்கர்

முதன்முறையாக பிரபல இசையமைப்பாளருடன் கூட்டணி அமைக்கும் ஷங்கர்?

Update: 2021-07-05 08:00 GMT
ஷங்கர் - ராம்சரண் கூட்டணியில் உருவாக உள்ள புதிய படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் ஷங்கர், அடுத்ததாக தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்க திட்டமிட்டுள்ள இயக்குனர் ஷங்கர், தற்போது அதற்கான முதற்கட்ட பணிகளை செய்து வருகிறார்.

இந்நிலையில், இப்படத்திற்கு தெலுங்கு திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் தமன் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தக் கூட்டணி உறுதியானால் ஷங்கர் படத்துக்கு தமன் இசையமைக்கும் முதல் படமாக இது அமையும். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஷங்கர், தமன்

முன்னதாக இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2003-ம் ஆண்டு வெளியான பாய்ஸ் படத்தில் இசையமைப்பாளர் தமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அப்படத்திற்கு பின் அவர் நடிப்பை விட்டுவிட்டு முழு நேர இசையமைப்பாளராக மாறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News