சினிமா
இயக்குனர் சூர்யோதே பெரம்பள்ளியின் மகன் மயூர்

பிரபல இயக்குனரின் 20 வயது மகன் சாலை விபத்தில் பலி - திரையுலகினர் அதிர்ச்சி

Published On 2021-07-05 12:39 IST   |   Update On 2021-07-05 12:39:00 IST
பைக்கில் அதிவேகமாக சென்ற பிரபல இயக்குனரின் மகன், விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
கன்னட திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வருபவர் சூர்யோதே பெரம்பள்ளி. இவரின் மகனான மயூர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு பைக்கில் சென்று கொண்டிருந்த போது டேங்கர் லாரி மீது மோதி விபத்தில் சிக்கி உள்ளார். இதில் பலத்த காயமடைந்த மயூர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். அவருக்கு வயது 20.


இயக்குனர் சூர்யோதே பெரம்பள்ளி

இந்த விபத்து குறித்து விசாரணை நடத்திய போலீசார், இரவு நேரத்தில் அதிவேகமாக பைக் ஓட்டியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிவித்தனர். முன்னணி இயக்குனரின் மகன் சாலை விபத்தில் மரணமடைந்த சம்பவம் கன்னட திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கன்னட திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும், இயக்குனர் சூர்யோதே பெரம்பள்ளிக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

Similar News