சினிமா
அக்‌ஷய் குமார்

3600 நடன கலைஞர்களுக்கு உதவிய அக்‌ஷய் குமார்

Published On 2021-05-25 23:09 IST   |   Update On 2021-05-25 23:09:00 IST
பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் 3600 நடன கலைஞர்களுக்கு உதவி செய்து இருக்கிறார்.
கொரோனா முதல் அலையின்போதே திரையுலகை சேர்ந்தவர்களுக்கு மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கும் அதிக அளவிலான நிதி உதவி மற்றும் நிவாரண பொருட்களை வழங்கியவர் அக்‌ஷய் குமார். தற்போது கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வரும் நிலையில், ஏற்கனவே நிவாரண நிதி அளித்துள்ள அக்‌ஷய் குமார், தற்போது 3600 டான்சர்களுக்கு ஒருமாதத்திற்கு தேவையான உணவுப்பொருள்களை வழங்கியுள்ளார்.


அக்ஷய் குமார் - கணேஷ் ஆச்சார்யா

இந்த தகவலை நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா வெளியிட்டுள்ளார். நடக்குழுவினருக்கு உதவி செய்யும்படி அக்‌ஷய் குமாரிடம் தான் கோரிக்கை வைத்ததாகவும் அதை தொடர்ந்து 3600 டான்சர்களுக்கு ஒருமாதத்திற்கு தேவையான நிவாரண பொருட்களுக்கான தொகையை தனது கணேஷ் ஆச்சார்யா அறக்கட்டளையிடம் அக்சய் குமார் கொடுத்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

Similar News