சினிமா
மதுப்பிரியா

பிக்பாஸ் பிரபலத்துக்கு போனில் தொல்லை கொடுத்த மர்ம நபர்கள்

Published On 2021-05-24 09:26 IST   |   Update On 2021-05-24 19:25:00 IST
செல்போனில் மர்ம நபர்கள் அடிக்கடி தொடர்பு கொண்டு தவறாக பேசி தொல்லை கொடுத்ததால், பிக்பாஸ் பிரபலம் ஒருவர் சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
பிரபல தெலுங்கு சினிமா பின்னணி பாடகி மதுப்பிரியா. இவர் டக்கரங்கா தூரங்கா, சாய்பல்லவி, வருண் தேஜ் நடித்த பிடா, டச் சேசி சுடு, நேலா டிக்கட், சாக்‌ஷியம் மற்றும் தேவி ஶ்ரீ பிரசாத் இசையில் சரிலேறு நீகவரு உள்ளிட்ட படங்களில் பாடல்கள் பாடி உள்ளார். ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றும் பிரபலமானார். மதுபிரியாவுக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் அவதூறு பதிவுகள் வெளிவந்தன. 


மதுப்பிரியா

செல்போனிலும் மர்ம நபர்கள் அடிக்கடி தொடர்பு கொண்டு தவறாக பேசி தொல்லை கொடுத்தனர். இதனால் அதிர்ச்சியான மதுப்பிரியா ஐதராபாத்தில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். தனக்கு எதிரான அவதூறு பதிவுகள் மற்றும் செல்போன் எண்களையும் போலீசில் வழங்கினார். போலீசார் 509 மற்றும் 354 பி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

Similar News