சினிமா
ராதே ஷ்யாம் படத்தின் போஸ்டர்

மீண்டும் பிரபாஸுடன் டூயட் பாடும் ‘தளபதி 65’ நடிகை

Published On 2021-05-23 13:19 IST   |   Update On 2021-05-23 13:19:00 IST
தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ள பூஜா ஹெக்டே, ராதே ஷ்யாம் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
யுவி கிரியேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ராதே ஷ்யாம்’. பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ராதா கிருஷ்ணகுமார் இயக்கி உள்ளார்.  

அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதன் காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 


பூஜா ஹெக்டே, பிரபாஸ்

இந்நிலையில், ராதே ஷ்யாம் படத்தின் இந்தி உரிமையை ரூ. 120 கோடிக்கு வாங்கியுள்ள பிரபல நிறுவனம், இப்படத்தில் ஏற்கனவே ஒரு டூயட் பாடல் இருந்தபோதிலும், மற்றுமொரு காதல் பாடல் வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளதாம். அதனால் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், அடுத்தபடியாக ஊரடங்கு முடிந்த பிறகு மீண்டும் பிரபாஸ் - பூஜா ஹெக்டே நடிக்கும் இன்னொரு டூயட் பாடல் காட்சியை படமாக்க ராதே ஷ்யாம் படக்குழு தயாராகி வருகிறார்களாம்.

Similar News