சினிமா
விஜய் தேவரகொண்டா

பிறந்தநாள் கொண்டாடிய பிரபல நடிகைக்கு சர்ப்ரைஸ் கிப்ட் அனுப்பிய விஜய் தேவரகொண்டா

Published On 2021-05-19 17:19 IST   |   Update On 2021-05-19 17:19:00 IST
நடிகர் விஜய் தேவரகொண்டா, பிறந்தநாள் கொண்டாடிய பிரபல நடிகைக்கு சர்ப்ரைஸ் கிப்ட் ஒன்றை அனுப்பி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
தமிழில் ‘காதல் அழிவதில்லை’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் சார்மி. இதையடுத்து ‘லாடம்’ ‘பத்து எண்றதுக்குள்ள’ போன்ற படங்களில் நடித்துள்ள அவர், தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக இருந்தார். கவர்ச்சி வேடங்களிலும் துணிச்சலாக வந்தார். தற்போது அவருக்கு பட வாய்ப்புகள் இல்லை. இதனால் தயாரிப்பாளராக மாறி இருக்கும் சார்மி, தற்போது பட தயாரிப்பில் இறங்கி உள்ளார். இவர் தற்போது 'லிகர்' படத்தை தயாரித்து வருகிறார். 



நடிகை சார்மி நேற்று பிறந்தநாள் கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். ஆனால் நடிகர் விஜய் தேவரகொண்டா, அவருக்கு சர்ப்ரைஸ் கிப்ட் ஒன்றை அனுப்பி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். நடிகை சார்மி தற்போது தயாரித்து வரும் ‘லிகர்’ படத்தில் விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News