சினிமா
கிளாஸ்மேட்ஸ் படக்குழுவினர்

15 ஆண்டுகளாக தொடரும் நட்பு... வீடியோ சாட்டிங்கில் ‘கிளாஸ்மேட்ஸ்’ நட்சத்திரங்கள் அரட்டை

Published On 2021-05-19 15:49 IST   |   Update On 2021-05-19 17:45:00 IST
‘கிளாஸ்மேட்ஸ்’ நட்சத்திரங்களுடனான வீடியோ சாட்டிங்கின் போது எடுத்த ஸ்கிரீன்ஷாட் புகைப்படங்களை நடிகர் பிரித்விராஜ், தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மலையாளத்தில் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான படம் ‘கிளாஸ்மேட்ஸ்’. பிரித்விராஜ், ஜெயசூர்யா, நரேன், இந்திரஜித், காவ்யா மாதவன் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் இந்தப்படத்தில் நடித்திருந்தனர். லால்ஜோஸ் இயக்கிய இப்படம் தமிழில் ‘நினைத்தாலே இனிக்கும்’ என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

கல்லூரியில் ஒன்றாக படித்த நண்பர்கள் பல வருடங்களுக்குப்பின் மீண்டும் சந்திக்க கூடும்போது, அவர்களின் கல்லூரி காலங்களை நினைவுபடுத்துவது போல திரைக்கதை அமைந்திருந்ததால், இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் இன்றளவும் மவுசு குறையாமல் இருக்கிறது.



இந்நிலையில் இப்படம் வெளியாகி 15 வருடங்கள் ஆன நிலையில், இதில் நடித்த நான்கு முக்கிய நடிகர்களான பிரித்விராஜ், ஜெயசூர்யா, நரேன், இந்திரஜித் ஆகியோர் வீடியோ சாட்டிங் மூலம் ஒன்று கூடி பேசி மகிழ்ந்துள்ளனர். இந்த வீடியோ சாட்டிங்கை நடிகர் பிரித்விராஜ் தான் ஏற்பாடு செய்திருந்தாராம். மேலும் அவர்களுடனான வீடியோ சாட்டிங்கின் போது எடுத்த ஸ்கிரீன்ஷாட் புகைப்படங்களை நடிகர் பிரித்விராஜ், தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Similar News