சினிமா
வைரமுத்து, ராஜேஸ்வரி

அவரென்ன மண்புழுவா?.... ஊராட்சி மன்றத் தலைவர் அவமதிக்கப்பட்டதற்கு வைரமுத்து கண்டனம்

Published On 2020-10-11 15:13 IST   |   Update On 2020-10-11 15:13:00 IST
சிதம்பரம் அருகே ஊராட்சி மன்றத் தலைவர் அவமதிக்கப்பட்ட சம்பவத்திற்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தெற்கு திட்டை கிராமத்தின் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் ராஜேஸ்வரி. இவர், கடந்த ஜூலை 17ம் தேதி நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின்போது பட்டியலினத்தை சேர்ந்தவர் எனக்கூறி கீழே அமர வைத்து அவமரியாதை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தின் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இதுதொடர்பாக கவிஞர் வைரமுத்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “பட்டியலினத்துத் தாயொருத்தி தரையில் வீசப்படுவதா? அவரென்ன மண்புழுவா? தலைவியாய்க் கூட அல்ல.. மனுஷியாய் மதிக்க வேண்டாமா? என் வெட்கத்தில் துக்கம் குமிழியிடுகிறது. தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க வேண்டிய துயரங்களுள் இதுவும் ஒன்று”. என வேதனை தெரிவித்துள்ளார்.

Similar News