சினிமா
மக்களால் குடிக்காமல் இருக்க முடிந்தது... அரசால் விற்காமல் இருக்க முடியவில்லை - தங்கர் பச்சான் காட்டம்
தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதை கண்டித்து இயக்குனர் தங்கர் பச்சான் அறிக்கை வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதை கண்டித்து இயக்குனர் தங்கர் பச்சான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோயம்பேடு காய் கனி வளாகம் கொரோனா தொற்று பரப்பும் மையமாக மாற்றம் கண்டதை கண்டு அனைவரும் அதிர்ந்து கிடக்கிறோம். இந்தநிலையில் மதுக்கடைகளை திறப்பதால் பதற்றம் மேலும் அதிகமாகிறது. இதிலிருந்து மீண்டு விட 43 நாட்கள் குடிக்காமல்தான் மக்கள் இருந்தார்கள். ஆனால் அரசால் மதுக்கடை திறக்காமல் இருக்க முடியவில்லை.
மீதம் இருப்பவர்களுக்கும் மதுக்கடைகள் கிருமியை கொண்டு சேர்த்து விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. வருமானம் இல்லாமல்தான் மதுக்கடைகளை திறக்கிறோம் என்பது ஏற்புடையது அல்ல. தாய்மார்களை, பிள்ளைகளை, முதியோரை குடிநோயாளிகள் அடித்து துன்புறுத்துவார்கள். பண்ட பாத்திரங்கள் அடகு கடைக்கு போகும். அனைத்து அரசியல் கட்சியினரும் இணைந்து மதுக்கடைகள் இயங்காமல் பார்த்து கொள்ளுங்கள். இவ்வாறு கூறியுள்ளார்.