சினிமா
விஜய்யின் அடுத்த படத்திற்கு இசையமைப்பது உண்மையா? - தமன் பேட்டி
விஜய்யின் 65 வது படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளதாக செய்திகள் பரவி வந்த நிலையில், அவர் அதுகுறித்து சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
விஜய் நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் உருவாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ஊரடங்கு காரணமாக இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. இதனிடையே விஜய்யின் 65-வது படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில், விஜய்யின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. முருகதாஸ் அப்படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் விஜய்யின் 65-வது படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளதாக செய்திகள் பரவின. அதனை அவர் சமீபத்திய பேட்டியில் உறுதிப்படுத்தி உள்ளார். "விஜய் படத்தில் பணியாற்ற ஆர்வமாக இருக்கிறேன். கடந்த மூன்று வருடமாக இதற்காக மெனக்கிட்டேன். தற்போது தான் சரியான நேரம் வந்துள்ளது. மகிழ்ச்சியாக உள்ளது" என தமன் கூறியுள்ளார். இதன்முலம் விஜய் படத்திற்கு அவர் முதன்முறையாக இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Here’s the official confirmation from @MusicThaman about #Thalapathy65 in yesterday’s live session 🔥#Master@actorvijaypic.twitter.com/QhuImlLM4k
— Vijay Fans Trends (@VijayTrendsPage) May 6, 2020