சினிமா
மது வாங்க வரிசையில் நிற்கும் பெண்கள்

பெண்களுக்கான இடஒதுக்கீடு... மதுக்கடைகளில் சரியாக கடைபிடிக்கப்படுகிறது - பிரபல நடிகை விமர்சனம்

Published On 2020-05-07 11:40 IST   |   Update On 2020-05-07 11:40:00 IST
மதுக்கடைகளில் மது வாங்க பெண்கள் தனி வரிசையில் நிற்பது குறித்து பிரபல நடிகை டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் ‘வழக்கு எண் 18/9’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மனிஷா யாதவ். இப்படத்திற்கு பிறகு ‘ஆதலால் காதல் செய்வீர்’, ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ ஆகிய பேர் சொல்லும் படங்களில் நடித்தாலும், மனிஷா யாதவ்வுக்கு சொல்லிக் கொள்ளும்படி படங்கள் எதுவும் அமையவில்லை. இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த ‘சென்னை 600028’ இரண்டாம் பாகத்தில் ‘சொப்பன சுந்தரி’ என்ற பாடலுக்கு குத்தாட்டம் ஆடிப் போனார். அதைத் தொடர்ந்து எந்த படவாய்ப்புகளும் இல்லாததால் கடந்த 2017-ம் ஆண்டு அவர் தனது காதலரை திருமணம் செய்துகொண்டார்.



இந்நிலையில், மதுக்கடைகளில் பெண்கள் மதுவாங்க வரிசையில் நிற்கும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மனிஷா யாதவ், "இதற்கு முன் பெண்களுக்கான 33 சதவிகித இட ஒதுக்கீடு சரியாக கடைபிடிக்கப்பட்டதா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் இங்கு அது சரியாக கடைபிடிக்கப்படுவதுபோல் உள்ளது.  மதுக்கடை முன் ஆண்களும், பெண்களும் தனித்தனி வரிசையில் நிற்கின்றனர்" என பதிவிட்டுள்ளார்.

Similar News