சினிமா
தயாரிப்பாளர் சங்க லோகோ

தயாரிப்பாளர் சங்க தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு

Published On 2020-05-07 02:10 GMT   |   Update On 2020-05-07 02:10 GMT
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கான தேர்தல், கொரோனா ஊரடங்கு காரணமாக மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய ஏற்பாடுகள் நடந்தன. ஏற்கனவே மே 10-ந்தேதி தேர்தல் நடத்த முடிவு செய்தனர். பின்னர் ஜூன் 21-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர். இதற்கான வேட்பு மனுக்கள் வருகிற 11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை சங்க அலுவலகத்தில் வழங்கப்படும் என்றும், மே 15-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை வேட்பு மனுக்களை சங்க அலுவலகத்தில் சேர்த்துவிட வேண்டும் என்றும் தனி அதிகாரி அறிவித்து இருந்தார்.

ஆனால் கொரோனா ஊரடங்கை வருகிற 17-ந்தேதிவரை நீட்டித்து இருப்பதால் தேர்தல் பணிகளை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. கோர்ட்டிலும் வழக்கு உள்ளது. இதையடுத்து தேர்தலை குறிப்பிட்ட தேதியில் நடத்த இயலாத நிலை உள்ளது என்றும், புதிய தேர்தல் அட்டவணை கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் அதிகாரி நேற்று அறிவித்தார்.

இந்த தேர்தலில் டி.சிவா, தேனாண்டாள் முரளி ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்து உள்ளனர். பாரதிராஜா, எஸ்.தாணு, சத்யஜோதி தியாகராஜன் உள்ளிட்ட மேலும் சிலரும் தலைவர் பதவிக்கு போட்டியிட இருப்பதாக பேச்சு அடிபடுகிறது.
Tags:    

Similar News