சினிமா
நாகார்ஜுனா, விஜய் தேவராகொண்டா

விஜய் தேவரகொண்டாவுக்கு ஆதரவாக களமிறங்கிய நாகார்ஜுனா

Published On 2020-05-06 16:04 IST   |   Update On 2020-05-06 16:04:00 IST
இளம் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஆதரவாக முன்னணி நடிகரான நாகார்ஜுனா களம் இறங்கி இருக்கிறார்.
தெலுங்குத் திரையுலகில் கொரோனா நிவாரண உதவிகளை பல சினிமா பிரபலங்கள் செய்து வருகிறார்கள். இளம் நடிகர் விஜய் தேவரகொண்டா அவருடைய அறக்கட்டளை மூலம் நிதி திரட்டி நிவாரண உதவிகளைச் செய்து வருகிறார்.

ஆனால், அந்த உதவிகளைக் கிண்டலடித்து ஒரு இணையதளம் செய்தி வெளியிட்டிருந்தது. அது குறித்து ஆவேசமடைந்த விஜய் தேவரகொண்டா பொய்யான செய்திகளை அளிக்கிறார்கள் என அந்த இணையதளம் மீது குற்றம் சாட்டினார். மேலும், தன்னிடம் ஒரு பேட்டி கேட்டதாகவும் அதைத் தர மறுத்ததால் தான் இப்படியெல்லாம் அவதூறாக எழுதுகிறார்கள என்று கொந்தளித்தார்.

விஜய்க்கு ஆதரவாக பல சினிமா நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டனர். இந்நிலையில் சீனியர் நடிகரான நாகார்ஜுனா, “இந்த வேதனையை நாம் கடந்து வந்திருக்கிறோம். விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பது மட்டும் போதாது, நடவடிக்கை எடுப்பதற்கான திட்டம் ஒன்றையும் உருவாக்க வேண்டும்,” என கேட்டுக் கொண்டுள்ளார். 

Similar News