சினிமா
பாடகர் மனோ மக்களுக்கு பொருட்கள் வழங்கியபோது எடுக்கப்பட்ட புகைப்படம்

பழங்குடியின மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய பாடகர் மனோ

Published On 2020-05-06 14:49 IST   |   Update On 2020-05-06 14:49:00 IST
சினிமா பின்னணி பாடகரான மனோ, பழங்குடியின மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எருக்குவாய்கண்டிகை கிராமத்தில் உள்ள பழங்குடியின மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சினிமா பின்னணி பாடகர் மனோ நிவாரண உதவி வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். 

அப்பகுதியில் தெலுங்கு பேசுபவர்களும் உள்ளனர் என்பதால் கொரோனா குறித்த விழிப்புணர்வை தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் பாடகர் மனோ எடுத்து கூறினார். அப்போது அவர், சினிமா பாடல்களை பாடி அங்குள்ளவர்களை உற்சாகப்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் தாசில்தார் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News