சினிமா
ஊரடங்கு நேரத்தில் வித்தியாசமாக போட்டோ ஷூட் எடுத்த சம்யுக்தா ஹெக்டே
கோமாளி படத்தில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை சம்யுக்தா ஹெக்டே வித்தியாசமான போட்டோ ஷூட் ஒன்றை எடுத்துள்ளார்.
ஜெயம் ரவி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் கோமாளி. பிரதீப் ரங்கநாதன் இயக்கிய இத்திரைப்படத்தில் சம்யுக்தா ஹெக்டே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித்தியாசமான போஸ்களுடன் புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில் சம்யுக்தா தற்போது நடத்தியுள்ள போட்டோஷூட் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் தனது இந்த புதிய போட்டோஷூட்டை வீடியோ கால் மூலம் நடத்தியிருக்கிறார்.
ஊரடங்கு நேரத்தில் இப்படி வித்தியாசமாக போட்டோஷூட் நடத்தி ரசிகர்களுக்கு விருந்து கொடுத்துள்ளார் சம்யுக்தா.