சினிமா
டான் டோனி, மேக்னா வின்செண்ட்

விவாகரத்துக்கு பின் பிரபல நடிகரை திருமணம் செய்யும் நடிகை

Published On 2020-05-05 18:44 IST   |   Update On 2020-05-05 18:44:00 IST
சமீபத்தில் டான் டோனி என்பவரை விவாகரத்து செய்து கொண்ட நடிகை மேக்னா வின்செண்ட், பிரபல நடிகரை 2வது திருமணம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தமிழில் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான ‘கயல்’ படத்தில் நடித்தவர் மேக்னா வின்செண்ட். இந்த படத்தில் ஆனந்தி, சந்திரன் ஆகியோரும் நடித்து இருந்தனர். மேலும் தெய்வம் தந்த வீடு, பொன்மகள் வந்தாள், அவளும் நானும் ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் நடித்தும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த டான் டோனி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண வாழ்க்கை சுமூகமாக சென்று கொண்டிருந்தபோது திடீரென கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. திருமணத்திற்குப் பின் மீண்டும் சீரியல்களில் மேக்னா நடிக்கத் தொடங்கியதால்தான் இந்த கருத்து வேறுபாடு என்று கூறப்படுகிறது.  சமீபத்தில் இருவருக்கும் முறைப்படி விவாகரத்து பெற்றுக் கொண்டனர்.



இந்த நிலையில் டான் டோனி ஏற்கனவே மறுமணத்திற்கு தயாராகி வருவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது மேக்னாவும் மறுமணத்திற்கு தயாராகி வருவதாக தெரிகிறது. ‘பொன்மகள் வந்தாள்’ சீரியலில் நடித்த நடிகர் விக்கி மற்றும் மேக்னா இடையே காதல் மலர்ந்ததாகவும், இந்த காதல் விரைவில் திருமணத்தில் முடிய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Similar News