சினிமா
விஜய்

மெர்சல் படம் ஹிட்டா? பிளாப்பா? - மனம் திறந்த தயாரிப்பாளர்

Published On 2020-05-05 14:50 IST   |   Update On 2020-05-05 14:50:00 IST
மெர்சல் படத்தின் தயாரிப்பாளர் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, அப்படத்தின் வசூல் குறித்து சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
விஜய் - அட்லீ கூட்டணியில் கடந்த 2017-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான படம் ‘மெர்சல்’. இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பாக ஹேமா ருக்மணி தயாரித்திருந்தார். விஜய் 3 கதாபாத்திரங்களில் நடித்திருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடியது. இருப்பினும் இப்படத்தை தொடர்ந்து தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் எந்த படத்தையும் தயாரிக்கவில்லை. இதற்கு காரணம் மெர்சல் படத்தில் ஏற்பட்ட நஷ்டம் தான் என செய்திகள் பரவின.



இதற்கு அந்த தயாரிப்பு நிறுவனமும் எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்தது. இந்நிலையில், தேனாண்டாள் பிலிம்ஸ்  முரளி, சமீபத்திய பேட்டியில் மெர்சல் படம் குறித்து பேசியுள்ளார். அவர், 'மெர்சல் வெற்றிப்படம் தான். தோல்வி படம் என கூறுவது உண்மையல்ல. விஜய்யுடன் அவ்வப்போது பேசிக்கொண்டு தான் இருக்கிறேன். அவர் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடித்து முடித்த பிறகு, மீண்டும் இணைவது குறித்து பேசுவோம்' என தெரிவித்துள்ளார்.

Similar News