பிரபல பாலிவுட் நடிகரான அக்ஷய் குமார், அஜித் நடிப்பில் வெளியான வீரம் படத்தின் ரீமேக்கில் இருந்து விலகி இருக்கிறார்.
அஜித் படத்தில் இருந்து விலகிய அக்ஷய் குமார்
பதிவு: ஜூன் 11, 2019 16:30
அஜித் நடிப்பில் 2014-ம் ஆண்டு வெளியான படம் வீரம். சிவா இயக்கத்தில் உருவான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தை இந்தியில் உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
’லொல்’ என்ற பெயரில் பர்கத் சாம்ஜி இயக்குகிறார். அஜித் ஏற்று நடித்த கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் ஒப்பந்தமான நிலையில் கால்ஷீட் பிரச்சினை காரணமாக அவர் படக்குழுவில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக தற்போது ராஸி படத்தின் மூலம் பிரபலமான விக்கி கவுஷல் இணைந்துள்ளார்.
அக்ஷய் குமார் தற்போது ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் லக்ஷ்மி பாம் படத்தில் நடித்துவருகிறார். காஞ்சனா படத்தின் ரீமேக்காக அப்படம் உருவாகிறது. இதுதவிர சூர்யாவன்ஷி, தி எண்ட் ஆகிய படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.
Related Tags :